இட்லி நமது காலை உணவில் மிகவும் முக்கியமாக இடம்பெறும் ஒரு உணவாகும். இதற்கு கட்டாயமாக அரிசி உளுந்து தேவைப்படும்.
இந்த இட்லி உணவை சட்னி, சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக உணவாக இருக்கும்.
ஆனால் இந்த இட்லியை பசியை போக்கும் உணவாகவே அனைவரும் பார்க்கின்றனர். ஆனால் இட்லியை சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.
இது பற்றி யாருக்கும் தெரிவதில்லை. அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இட்லி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
இட்லி உளுந்து மற்றும் அரிசி போன்ற பல பொருட்கள் சேர்த்து செய்யப்படுகின்றது. இதனால் இதில் புரதச் சத்துக்கள், அமினோ அமிலங்கள், நார்ச்சத்துக்கள் என ஏராளமான சத்துக்கள் கிடைக்கும்.
இது தவிர உலக சுகாதார நிறுவனம் உலகில் உள்ள ஊட்டச்சத்து உணவுகளில் இட்லியும் ஒன்று என பரிந்துரைத்துள்ளது.
இட்லியில் அதிக நார்ச்சத்து இருப்பதால் இது எளிதில் செரிமானமாகக்கூடியது. எனவே செரிமானப்பிரச்சனை இருப்பவர்கள் இதை சாப்பிடலாம்.
இதனால் இட்லியை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். உடலில் காணப்படும் நல்ல ரத்தத்தின் அளவை உற்பத்தியில் அதிகரிக்க இட்லி உதவுகிறது.
காலை உணவைாக இட்லி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை மேலும் மேன்படுத்தும். நாள் முழுக்க வேலை செய்பவர்களுக்கு படிக்கும் குழந்தைகளுக்கு மூளை சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது அவசியம்.
எனவே ஒரு நாளைக்கு ஏதாவது 1 வேளையில் இட்லி சாப்பிடுவது மூளையின் செயற்பாட்டை அதிகரித்து சுறுசுறுப்பாக வைத்திருக்கும். உணவை சரிவர எடுத்துக்கொள்ளாமல் அலட்சியம் செய்பவர்களுக்கு வயிற்றில் புண் ஏற்படும்.
இதனால் வயிற்றுக்கோளாறுகள் வரும். இதுபோன்ற பிரச்சனையை அனுபவிப்பவர்கள் இட்லி சாப்பிட்டால் வயிற்றுக்கோளாறுகளை முற்றிலும் சரி செய்து உணவை எளிதில் ஜீரணமாக்கும்.
இந்த இட்லி நீராவியில் வேகவைத்து தான் செய்யப்படுகின்றது. இதனால் இதில் அதிக கொழுப்புச்சத்து இல்லை. எனவே எளிதில் உடல் எடையை கட்டக்குள் கொண்டு வர நினைக்கும் நபர்கள் இந்த இட்லியை எடுத்துக்கொண்டால் மிகவும் நன்மை தரும்.
காலையில் அல்லது மாலையில் இரண்டு இட்லி சாப்பிட்டால் உடலுக்கு இத்ததை நன்மைகள் கிடைக்கின்றன. எனவே இனிமேல் அன்றாட உணவில் இட்லியையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.