சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜின் பணத்தை ஏமாற்றியவரை ரோகினி வசமாக பிடித்துள்ள நிலையில், குறித்த நபர் ரோகினியிடமிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து வாழ்க்கையை கொண்டு செல்லும் மீனாவை மாமியார் கொடுமை செய்கின்றார். ஆனால் கணவர் முத்து மீனாவிற்கு ஆறுதலாக இருந்து வருகின்றார்.
மீனாவை தொழிலில் இருந்து விரட்டுவதற்கு சதி செய்த சிந்தமணி கடைசியில் தோற்றுப் போயுள்ள நிலையில், தற்போது முத்துவிடம் டிரைவிங் கற்றுக் கொள்வதற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் மனோஜின் பணத்தை ஏமாற்றிய நபர் ரோகினியிடம் சிக்கியுள்ளார். ஆனால் கடைசியில் ரோகினியை கீழே தள்ளிவிட்டுவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளார்.