நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் பாகற்காய் குழம்பு

பொதுவாகவே பெரும்பாலானவர்களுக்கு பாகற்காய் என்றாலே அலர்ஜி. அதற்கு மிக முக்கியமான காரணம் அதன் கசப்புத்தன்மை தான்.

பொதுவாகவே பெரும்பாலானவர்களுக்கு பாகற்காய் என்றாலே அலர்ஜி. அதற்கு மிக முக்கியமான காரணம் அதன் கசப்புத்தன்மை தான்.

peanut chutney: ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் வேர்கடலை சட்னி
peanut chutney: ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் வேர்கடலை சட்னி
ஆனால் கசப்பு சுவை கொண்ட ஒரு காய்கறி என்றாலும், மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் பாகற்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

குறிப்பாக பாகற்காயில் சாரோகின் என்ற வேதிப்பொருள், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறந்த உணவாகவும், அருமருந்தாகவும் பாகற்காய் விளங்குகின்றது.

அதுமட்டுமன்றி பாகற்காயில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், எடையை குறைக்க வேண்டும் என போராடுபவர்களுக்கு இது சிறந்த தெரிவாக இருக்கும்.

மேலும் பாகற்காயில் உள்ள நார்ச்சத்து, செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலை போக்குவதுடன், இதில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்பதவும் பெரிதும் துணைப்புரிகின்றது.

இவ்வளவு மருத்துவ குணம் கொண்ட பாகற்காயை கொண்டு துளியும் கசப்புத்தன்மை இல்லாமல், எப்படி அருமையான சுவையில் பாகற்காய் குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பாகற்காய் – 300 கிராம்

வறுத்து அரைத்த வெந்தயப்பொடி – 1/2 தே.கரண்டி

சின்னவெங்காயம் – 200 கிராம்

நல்லெண்ணெய் – 50மி.லி

தக்காளி – 2

புளி – எலுமிச்சைப்பழ அளவு

உப்பு – தேவையான அளவு

நறுக்கிய பூண்டு – 2 தே.கரண்டி

மிளகாய்த்தூள் – 1 தே.கரண்டி

மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி

தனியாத்தூள் – 1½ தே.கரண்டி

சீரகம் – 1தே.கரண்டி

தேங்காய்த்துருவல் – 100 கிராம்

செய்முறை
முதலில் சின்னவெங்காயத்தை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

அதனையடுத்து முற்றாத பாகற்காயின் விதைகளை நீக்கிய பின்னர் பொடியாகவோ அல்லது வட்டமாகவோ நறுக்கிக் வைத்துக்கொள்ள வேண்டும்.

முற்றாத பாகற்காயின் விதைகளை நீக்கி விட்டு பொடியாகவோ அல்லது வட்டமாகவோ விரும்பியவாறு நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் சீரகம், தேங்காய்த்துருவல், தக்காளி ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் பாகற்காயைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பாகற்காய் நன்றாக வதங்கியதும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி வெந்தயப்பொடி, பூண்டு, தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.

அதன் பின்னர் அரைத்த விழுது, சிறிது தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விட்டு, குழம்பு முக்கால் பதத்திற்கு வந்ததும், உப்பு, புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விட்டு எண்ணெய் பிரிந்து வந்ததுதும் இறக்கினால் அவ்வளவு தான் கசப்பே இல்லாமல் ஆரோக்கியம் நிறைந்த பாகற்காய் குழம்பு தயார்.