ரஜினி ராதிகா இடையே இப்படி ஒரு ரகசியமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ரஜினிகாந்த் உடன் ஜோடியாக சினிமாவில் பல நடிகைகள் நடித்துள்ளனர். ஆனால் அதில் இவருக்கு மிகவும் நெருக்கமான பிரெண்ட் என்றால் அது நடிகை ராதிகா தான்.

இவர்கள் இருவரும் இணைந்து நல்லவனுக்கு நல்லவன், மூன்று முகம், ஊர்க்காவலன், போக்கிரி ராஜா, ரங்கா, நன்றி மீண்டும் வருக போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளனர்.

ரகசியம்
இந்நிலையில், ராதிகா மற்றும் ரஜினிகாந்த் இடையே உள்ள ரகசியம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ரஜினிகாந்த் ஒரு ஃபங்ஷனுக்கு வந்தபோது ரப்பர் செருப்பு அணிந்து வந்தாராம்.

அதைப் பார்த்த ராதிகா அவரிடம், நீங்கள் சூப்பர் ஸ்டார் தானே, பின் ஏன் இது போன்று செருப்பு அணிந்து கொண்டு வருகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அன்றிலிருந்து எந்த ஒரு நிகழ்ச்சியில் ராதிகாவை பார்த்தாலும் முதலில் அவரது செருப்பை தான் பார்ப்பார் ரஜினி. என்று தகவல் வெளியாகி உள்ளது.