கூலி திரைப்படத்தை இத்தனை கோடிக்கு விற்பனை செய்திருக்கிறார்கள் தெரியுமா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்கில் வெளிவரவிருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், சௌபின் ஷாஹிர், உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதனை நேற்று அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தனர்.

கூலி திரைப்படத்தின் ஓடிடி உரிமை குறித்து சமீபத்தில் தகவல் ஒன்று வெளிவந்தது. அதாவது இப்படத்தை ரூ. 120 கோடிக்கும் அமேசான் பிரைம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ரூ. 120 கோடிக்கு கூலி திரைப்படம் விற்பனை ஆனது மட்டுமல்லாமல், மற்றொரு புதிய சாதனையையும் படைத்துள்ளது.

ஆம், ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் அதிக விலைக்கு ஓடிடியில் விற்பனை செய்யப்பட்ட திரைப்படம் என்கிற சாதனையை கூலி படைத்துள்ளது. இதற்கு முன் 2.0 படம் ரூ. 110 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது கூலி திரைப்படம் அந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை செய்துள்ளது.

விரைவில் இந்த சாதனையை ஜெயிலர் 2 படம் முறியடியும் என ரசிகர்கள் இப்போதே பேச துவங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.