பணம் இல்லாட்டியும் மகிழ்சியாக இருக்கும் ராசியினர் இவர்கள் தானாம்…

பொதுவாகவே இவ்வுலகில் எந்த பேதமும் இல்லாமல் அனைவரின் தேவையாகவும் இருப்பது பணம் தான். பணம் இன்றி எதையுமே செய்ய முடியாது என்ற நிலை தோன்றி வெகு காலம் ஆகிவிட்டது.

நாளுக்கு நாள் பணத்தின் தேவை அதிகரித்துக்கொண்டே தான் செல்கின்றது. இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் எல்லா சூழ்நிலைகளிலும் பணம் இல்லாவிட்டாலும் கூட மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று ஜோதிட சாத்திரம் குறிப்பிடுகின்றது.

அப்படி பணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லாமல் வாழ்வில் சின்ன சின்ன விடயங்களிலும் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த ரிஷப ராசியினருக்கு வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சிககு பஞ்சமே இருக்காது.

இவர்கள் மிகுந்த நேர்மையும் குணம் கொண்டவர்களாகவும் எதிலும் உண்மையை பேசும் பண்புடையவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்களின் கடின உழைப்பு மற்றும் நேர்மை காரணமாக கையில் பணம் இல்லாத போதும் இவர்களின் மனம் அமைதியாகவும் திருப்பதியாகவும் இருக்கும்.

இவர்கள் யாரையும் ஏமாற்றும் குணம் அற்றவர்களாக இருப்பார்கள்.அதனால் இவர்கள் சின்ன சின்ன விடயங்களிலும் அன்பான வார்த்தைகளிலும் திருப்பதியடையும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

கடகம்

சந்திரனால் ஆளப்படும் கடக ராசியினர் எப்போதும் பணத்தை விடவும் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்களின் அன்பு மிகவும் உண்மையானதாக இருக்கும். இவர்கள் அன்புக்குரியவர்களின் அன்பான வார்த்தைகளுக்கு அதிக மதிப்பபார்கள்.

இவர்களுக்கு பணத்தின் தேவை இருக்கின்ற போதிலும் பணம் எப்போதும் மகிழ்சிக்கு காரமாக இருக்க இவர்கள் அனுமதிப்பதில்லை.

மற்றவர்களின் பாராட்டு, காதல் போன்ற விடயங்களில் தான் அதீத மகிழ்ச்சியடைவார்கள். இவர்களிடம் பணம் இல்லாத சூழ்நிலைகளிலும் கூட மனநிறைவுடன் வாழும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

கன்னி

அறிவாற்றலின் கிரகமான புதனால் ஆளப்படும் கன்னி ராசியினர் புத்திக்கூர்மைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் தங்களின் வாழ்க்கையில் ஒழுங்கையும் செயல்திறனையும் ஏற்படுத்தக்கூடிய சின்ன விடயங்களிலும் இவர்களின் மகிழ்சி அடங்கியிருக்கும்.

இந்த ராசியினர் சுற்றுப்புறங்களை ஒழுங்கமைத்தல், சுத்தம் செய்தல் மற்றும் மேம்படுத்துவதில் பணம் சம்பாதிப்பதை பார்க்கிலும் அதிக மகிழ்ச்சியடைவார்கள்.