உலகில் விலையுயர்ந்த நாயை வாங்கிய கோடீஸ்வரர்

பெங்களூருவைச் சேர்ந்த நாய் ஆர்வலர் சதீஷ், 50 கோடி ரூபாய் கொடுத்து உலகின் மிக விலையுயர்ந்த நாயை வாங்கியுள்ளார். இது தொடர்பான விரவான பதிவை இங்கு பார்க்கலாம்.

உலகின் விலையுயர்ந்த நாய்
பெங்களூருவைச் சேர்ந்த நாய் வளர்ப்பு ஆர்வலர் எஸ். சதீஷ் உலகிலேயே மிகவும் விலையுர்ந்த நாயை 50 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.

இது காட்டு ஓநாய் மற்றும் காகசியன் ஷெப்பர்ட் ஆகியவற்றின் கலப்பு இனமாகும். அத மட்டுமல்லாமல் இது கடபாம்ப் ஒகாமி எனும் அரியவகை இனத்தை சேர்ந்தது.

இந்த நாயின் பெயர் வுல்ஃப்டாக். இத அரியவகை நாய் என்பதால் இதை 50 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். இந்த நாய்க்கு ஒகாமிக்கு எட்டு மாத வயதுதான் ஆகிறது. இதன் எடை 75 கிலோ மற்றும் நீளம் 30 அங்குலமாகும்.

எஸ். சதீஷ்
சதீஷ் இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவராக உள்ளார். பல வருடங்களுக்கு முன்பே நாய்களை வளர்ப்பதை நிறுத்திவிட்டார். தற்போது சதீஷ் தனது அரிய நாய்களை விலங்கு பிரியர்களுக்கு பரிசளிப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கிறார்.

30 நிமிட நிகழ்ச்சிக்கு 2,200 பவுண்டுகள் (ரூ. 2,46,705) கிடைக்கிறது என்றும் ஐந்து மணி நேர நிகழ்ச்சிக்கு 9,000 பவுண்டுகள் (ரூ. 10,09,251) சம்பாதிப்பதாகவும் சொல்கிறார் சதீஷ்.