சூர்யாவின் முதல் காதல் நாயகி யார் தெரியுமா?

தமிழ் திரையுலகில் டாப் நடிகர்களின் இடத்தில் பெற்ற முக்கிய நடிகராக விளங்குபவர், சூர்யா. நேருக்கு நேர் படம் மூலம் அறிமுகமான இவர், இப்போது பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்ற ஹீரோவாக விளங்குகிறார். இவரும் ஜோதிகாவும் அன்னியோன்யமான தம்பதிகள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சூர்யாவின் முதல் கிரஷ், ஜோதிகா இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா?

சூர்யாவின் க்ரஷ்…

மனிதர்களாக பிறந்த நம் அனைவருக்கும் காதல் வருவதும், கிரஷ் வருவதும் புதிதல்ல. உணர்வுகள் வரத்தொடங்கிய நாள் முதலேயே, இப்பேற்பட்ட உணர்வுகளும் மனதிற்குள் குடி புகுந்துவிடும். அதற்கு சூர்யாவும் விதிவிலக்கல்ல. இவர் தனது ஒரு படத்தின் பிரமோஷனுக்காக ஒரு தெலுங்கு நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர், பாலையா (நந்தமரி பாலகிருஷ்ணன்). இவர் சூர்யாவிடம் அவரது சினிமா வாழ்க்கை மற்றும் பர்சனல் வாழ்க்கை குறித்து சில கேள்விகளை கேட்டார். அதில் ஒரு பகுதியாக சூர்யாவின் முதல் க்ரஷ் குறித்து அவரது தம்பியும் நடிகருமான கார்த்திக்கு போன் செய்தார். அப்போது கார்த்திதான் சூர்யாவின் முதல் கிரஷ் குறித்து முதன் முறையாக வெளி உலகத்திற்கு கூறினார்.

யார் அந்த நடிகை?

நடிகர் பாலையாவிடம் சூர்யாவின் முதல் கிரஷ் குறித்து பேசிய கார்த்தி, “சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே பாட்ல வருவாங்கல்ல சார்.. அவங்கதான்..” என்று கூறினார். உடனே பாலையா அதற்கு, “அந்தப் பாட்டில் வருவது.. கௌதமிதானே.. அவங்கதான் சூர்யாவின் கிரஷா?” என்று கேட்டார். அதற்கு கார்த்திக்கும் ஆமாம் என்றார். சூர்யா அருகில் இருந்து கொண்டு, வெட்கப்பட்டு வாய் நிறைய சிரித்தார்.
இத்தனை நாட்களாக ரசிகர்கள் பலர், ஜோதிகாவை தான் சூர்யா முதன்முதலில் காதலித்த நடிகை என்றும், வேறு யாரையும் சூர்யா ஏறெடுத்து பார்த்ததில்லை என்றும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், உண்மையில் சூர்யாவின் முதல் க்ரஷ் கௌதமி என்ற விஷயம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யா-ஜோதிகாவின் காதல்:

சூர்யாவும் ஜோதிகாவும் முதலில் சேர்ந்து நடித்த படம் “பூவெல்லாம் கேட்டுப்பார்”. இந்த படத்திற்கு பிறகு இருவரும் மாயாவி, உயிரிலே கலந்து, பேரழகன், காக்க காக்க, ஜில்லுனு ஒரு காதல் என பல படங்களின் நடித்தனர். இதில் காக்க காக்க படத்தில் நடித்த போதுதான் இருவருக்கும் காதல் முற்றியதாக கூறப்படுகிறது. இதை எடுத்து கடைசியாக ஜில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த முடித்தவுடன் இருவரும் 2006 ஆம் ஆண்டு இல்வாழ்க்கையில் இணைந்தனர்.

கிட்டத்தட்ட 19 வருடங்களாக இணைபிரியா தம்பதிகளாக இருக்கும் இவர்களுக்கு, தியா-தேவ் என இரு பிள்ளைகள் உள்ளனர். சென்னையில் தங்கி இருந்த இவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் மொத்தமாக மும்பைக்கு குடி பெயர்ந்து விட்டனர். தற்போது ஜோதிகா, பழைய இந்தி படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். சூர்யாவும் கங்குவாவிற்கு பிறகு ரெட்ரோ மற்றும் சூர்யா 45 ஆகிய படங்கள் மூலம் கம்-பேக் கொடுக்க தயாராகி வருகிறார். பிள்ளைகள் இருவரும் மும்பையின் பிரபலமான ஒரு பள்ளியில் பயின்று வருகின்றனர்.