தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இந்த மாத இறுதி முதல் தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன(Samantha Vidyaratne) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தெரிவித்த அவர்,

இதற்காக 5,600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஐந்து ஏக்கருக்கும் குறைவான தென்னை விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உர மானியங்களை வழங்குவதற்காக அரசாங்கத்திடம் 56,700 மெற்றிக் தொன் உரம் இருப்பதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.