இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில்சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சாதனை!

உலக அளவில் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் அதிக முறை 250 ஓட்டங்களுக்கு மேல் அடித்த ஒரே அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி படைத்துள்ளது.

இதேவேளை இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர்களில் அதிகபட்ச ஓட்டங்களை விளாசிய அணிகளின் வரிசையில் முதல் மூன்று இடங்களை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தன்வசப்படுத்தியுள்ளது.

உலக சாதனை
கடந்த ஐ.பி.எல் தொடரின் போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி குவித்த 287 ஓட்டங்களே அதிகபட்ச ஓட்டங்களாகப் பதிவாகியுள்ளது.

அத்துடன் ஐ.பி.எல் வரலாற்றில் பெறப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஓட்டங்களாக, நேற்றைய தினத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி குவித்த 286 ஓட்டங்கள் பதிவாகியுள்ளன.

மேலும் கடந்த 2024 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி குவித்த 277 ஓட்டங்கள் மூன்றாவது அதிகபட்ச ஓட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.