கண் திருஷ்டி, எதிரி தொல்லையை விரட்ட பரிகாரம்!

மனிதர்கள் இன்றைய சூழ்நிலையில், இந்த மூன்று முக்கியமான விஷயங்களில், அடிக்கடி பாதிப்பு அடைகிறார்கள். ஒரு மனிதனினுக்கு தொந்தரவு வர, இந்த மூன்று விஷயங்களும் முக்கிய காரணமாக இருக்கிறது. முதல் விஷயம் அடுத்தவர்களுடைய கண்பார்வை, கண் திருஷ்டி, இரண்டாவது விஷயம் தேவையற்ற எதிரி தொல்லை, எதிரிகளால் வரக்கூடிய பிரச்சினைகள், துன்பங்கள், மூன்றாவது விஷயம் எதிர்பார சூழ்நிலையில் உண்டாக கூடிய அவமானம்.

இது மூன்றுமே மனிதனை அதிகப்படியாக பாதிப்படைய செய்கிறது. இந்த பிரச்சனையிலிருந்து வெளிவர தாந்திரீக ரீதியாக ஒரு எளிமையான பரிகாரம் உள்ளது. அதை தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். எந்த பரிகாரமாக இருந்தாலும் குலதெய்வத்தின் மீது நம்பிக்கை வைத்து குலதெய்வத்தின் அனுமதியோடு செய்வது சிறப்பு.

உங்களுக்கு கண் திருஷ்டி பிரச்சனை, எதிரியால் பிரச்சனை, கோர்ட் கேஸ் வழக்குகளால் அவமானம், குடும்பத்தில் சண்டை சச்சரவு எது இருந்தாலும், அந்த பிரச்சனையில் இருந்து வெளிவர இந்த பரிகாரத்தை தாராளமாக நீங்களே வீட்டில் இருந்த படி செய்யலாம். நாம் சமையலுக்கு பயன்படுத்தும் மிளகு 48 எண்ணி தனியாக ஒரு வெள்ளை துணியில் வைத்து இடித்துக் கொள்ளுங்கள். ஒன்றும் இரண்டுமாக இடித்தாலே போதும். அந்த வெள்ளை துணியை, இடித்து வைத்திருக்கும் மிளகுடன் அப்படியே சின்ன முடிச்சாக கட்டி 1/2 லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு விடுங்கள். மூன்று அல்லது நாலு நாள் மிளகு, அந்த எண்ணெயில் நன்றாக ஊறட்டும்.

பிறகு அந்த நல்லெண்ணெயை பயன்படுத்தி வீட்டில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். வரவேற்பறையில் ஒரு தட்டு வைத்து அதன் மேலே ஒரு மண் அகல் வைத்துக் கொள்ளுங்கள். குலதெய்வத்தை நன்றாக வேண்டிக் கொள்ளுங்கள். உங்களுக்கு எந்த பிரச்சனை இருக்கிறது. அந்த பிரச்சனை உங்களை விட்டு விலக வேண்டும் என்று வேண்டி தயார் செய்து வைத்திருக்கும் எண்ணெயை அந்த அகல் விளக்கில் ஊற்றி, திரி போட்டு வேண்டி விளக்கை வரவேற்பறையிலேயே வைத்து விடுங்கள்.

ஒரு மணி நேரம் இந்த விளக்கு எரிந்தாலும் போதும். உங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டம் வெளியேறிவிடும். இந்த விளக்கை காலை அல்லது மாலை உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வீட்டில் ஏற்றலாம். வாரம் ஒரு முறை ஏற்றலாம். முடிந்தால் தினமும் தொடர்ந்து 48 நாள் இந்த விளக்கை ஏற்றுவதும் சிறப்பான பலனை தரும்.