காலத்தால் வரும் கஷ்டங்களை தீர்த்து வைப்பவர் கால பைரவர். சிவபெருமான் கோவிலில், சிவனுக்கே காவலாக நிற்பவர் இந்த கால பைரவர். காசியை காத்து ரட்சிக்க கூடிய கால பைரவரை அனுதினமும் நாம் வழிபாடு செய்தால், நமக்கான பாதுகாப்பும் நிச்சயம் கிடைக்கும். அதிலும் செல்வத்தை கொடுப்பதில் இந்த கால பைரவருக்கு நிகர் வேறு யாரும் இருக்கவே மாட்டார்கள். கஷ்டங்கள் எல்லாம் குறையும் போது, நம்மை தேடி செல்வம் தானாக வந்துவிடும். அந்த கஷ்டத்தை குறைக்க கால பைரவர் வழிபாட்டை எப்படி செய்வது.
கால பைரவரை எப்படி வழிபாடு செய்தால் நம்முடைய பணகஷ்டம் தீரும் ஆன்மீகம் சார்ந்த ஒரு எளிய வழிபாட்டு முறை இந்த பதிவில் உங்களுக்காக. காலபைரவர் கோவிலுக்கு செல்லுங்கள். வெள்ளிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை இந்த இரண்டு தினங்களில் காலபைரவரை வழிபாடு செய்வது சிறப்பு. மாலை நேரத்தில் கால பைரவரை வழிபாடு செய்வது சிறப்பு. மேற்குறிப்பிட்ட இந்த நேரத்தில் நீங்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
தவறு கிடையாது. எப்போது சிவன் கோவிலுக்கு சென்றாலும், காலபைரவருக்கு இரண்டு மண் அகல் விளக்கில் இலுப்பை எண்ணெய் ஊற்றி, தீபம் போட்டு விடுங்கள். இரண்டே இரண்டு சந்தன ஊதுவத்தி வாங்கிக்கொள்ளுங்கள். சந்தன வாசம் நிறைந்த சுத்தமான ஊதுவத்தியை ஏற்றி அதை மனதார பைரவருக்கு காட்டுங்கள். இந்த சந்தன ஊதுவத்தி பைரவருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த வாசனையில் மயங்கி பணத்தை உங்களுக்கு காலபைரவர் வாரி வாரி கொடுத்துவிடுவார். பணகஷ்டம் உடனடியாக தீரும்.
“மஹா பைரவாய நமஹ” என்ற மந்திரத்தை சொல்லி அந்த கால பைரவரை வழிபடுங்கள். ஊதுவத்தி காட்டும்போது, மந்திரத்தை சொல்லலாம். விளக்கு ஏற்றும் போது மந்திரத்தை சொல்லலாம். அந்த கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து மந்திரத்தை சொல்லலாம்.