நம்முடைய வாழ்க்கையில் நாம் சந்திக்கக்கூடிய பலவிதமான பிரச்சனைகளுக்கு காரணம் பணம் என்ற ஒன்றுதான். பணம் இருந்து விட்டால் பத்தும் பறந்து போகும் என்றுதான் கூறுவார்கள். பணம் இல்லை என்றால் நம்மை தேடி கடன், கஷ்டம் என்று அனைத்தும் வந்துவிடும். இந்த கடனை தீர்ப்பதற்கு பலவிதமான பரிகாரங்களும் வழிபாட்டு முறைகளும் இருக்கின்றன. கடன் தீரவேண்டும் என்றால் அந்த கடனை அடைப்பதற்குரிய பணவரவு உண்டாக வேண்டும் அல்லவா? அந்த பணத்தை வாரி வழங்கக் கூடிய தெய்வமாக பெருமாளும் மகாலட்சுமி தாயாரும் விளங்குகிறார்கள். அதனால் கடன் தீருவதற்கு நமக்கு தேவைப்படக்கூடிய செல்வத்தை அருள வேண்டும் என்று பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி பெருமாளின் எந்த மந்திரத்தை கூறி வழிபட்டால் நம்முடைய கடன் பிரச்சினை தீரும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
இந்த உலகத்தை காத்து ரட்சிக்கும் தெய்வமாக திகழக்கூடியவர் தான் பெருமாள். செல்வங்களுக்கு அதிபதியாக திகழக்கூடிய மகாலட்சுமியை தன்னுடைய மார்பில் வைத்துக் கொண்டு இருப்பவராக தான் இவர் திகழ்கிறார். இவரை நாம் முழுமனதோடு தொடர்ச்சியாக வழிபாடு செய்தோம் என்றால் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். அதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தரித்திரம் முற்றிலும் நீங்கி அனைத்து விதமான செல்வ வளங்களுடன் செழிப்பாக வாழ முடியும். பெருமாளின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு சில மந்திரங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றிதான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
இந்த மந்திர வழிபாட்டை தேய்பிறையில் வரக்கூடிய சனிக்கிழமை அல்லது அமாவாசை அன்று ஆரம்பிக்க வேண்டும். அன்று காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய பெருமாளுக்கு துளசி மாலை, தாமரைப்பூ போன்றவற்றை வாங்கி கொடுத்து பெருமாளை மூன்று முறை வலம் வந்து உங்களின் அருளால் இன்றிலிருந்து உங்களுடைய மந்திரத்தை நான் கூற போகிறேன் உங்களுடைய பரிபூரண அருள் எனக்கு கிடைக்க பெற்று என்னுடைய கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீர்வதற்குரிய செல்வ வளம் பெருக வேண்டும் என்று முழு மனதோடு வேண்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு வீட்டிற்கு வந்து வீட்டு பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து அந்த தீபத்தை பார்த்தவாறு பின்வரும் பெருமாளுக்குரிய இந்த மந்திரத்தை 108 முறை கூற வேண்டும். அவ்வாறு நாம் கூறும் பொழுது கையில் துளசி இலைகளை வைத்துக்கொண்டு கூறுவது என்பது மிகவும் சிறப்பு. 108 முறை கூறி முடித்த பிறகு அந்த துளசி இலைகளை வீட்டு பூஜையறையில் இருக்கக்கூடிய பெருமாளின் படத்திற்கு முன்பாக வைத்து விட வேண்டும். அன்று முழுவதும் இந்த துளசி இலைகள் பெருமாளின் படத்திற்கு கீழேயே இருக்கட்டும்.
மறுநாள் குளித்து முடித்துவிட்டு வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும்பொழுது அந்த துளசி இலைகளை எடுத்து பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். இப்படி தினமும் தொடர்ச்சியாக நாம் இந்த முறையில் துளசி இலையை வைத்து 108 முறை பெருமாளின் மந்திரத்தை கூறி வழிபாடு செய்ய வேண்டும். முதல் நாள் வைத்த துளசி இலையை மறுநாள் எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும்.
இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்யக்கூடிய இந்த நாட்களில் அசைவத்தை தவிர்க்க வேண்டும். முடிந்த அளவு தினமும் பெருமாளின் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது என்பது சிறப்பை தரும். ஒருவேளை தினமும் பெருமாளின் ஆலயத்திற்கு செல்ல இயலவில்லை என்னும் பட்சத்தில் சனிக்கிழமை தோறும் மட்டுமாவது பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமாளை தரிசனம் செய்வது செல்வ வளத்தை அதிகரிக்கும்.