உள்ளூராட்சித் தேர்தல் முடியும் வரை அரசாங்க அச்சக அலுவலகத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலுக்கான அச்சிடும் பணிகளுக்காக அதிகாரிகள் 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும் என இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கஅச்சு அலுவலக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க அச்சக அலுவலகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அரசாங்க அச்சக அலுவலகத்திற்கு வெளியே பாதுகாப்பை வழங்குவதற்காக பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை நடமாடும் ரோந்துகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி நேற்று தொடங்கியுள்ள நிலையில், அரசாங்க அச்சுத் துறையில் 1,200 ஊழியர்கள் பணிபுரிகின்றமையும் குறிப்பிடதக்கது.