முன்னாள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவுக்கு (Jayantha Jayasuriya) அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தில் முக்கிய பதவியொன்று வழங்கப்படவுள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க்கில் இருக்கும் இலங்கையின் ஐக்கிய நாடுகள் சபைக்கான அலுவலகத்தில் இலங்கைக்கான வதிவிட நிரந்தரப் பிரதிநிதியாக ஜயந்த ஜயசூரியவை நியமிக்க அநுர தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அது குறித்த முன்மொழிவு நாடாளுமன்றத்தின் உயர் பதவிகளுக்கான மேற்பார்வைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதற்கான அங்கீகாரமும் அண்மையில் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் ஜயந்த ஜயசூரிய புதிய பதவியில் நியமிக்கப்படுவார் என்று தெரிய வந்துள்ளது.