பொதுவாக நாம் அன்றாட வாழ்க்கையில் பல தரப்பட்ட எண்ணெய் வகைகளை பயன்படுத்துவோம்.
அப்படி பயன்படுத்தும் எண்ணெய் வகைகளில் விளக்கெண்ணெய் முக்கியம் பெறுகிறது. ஏனெனின் விளக்கெண்ணெய்யில் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன.
நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெயை உபயோகிக்கும் அளவுக்கு மக்கள் விளக்கெண்ணெயை பரவலாகப் பயன்படுத்துவது குறைவு. வெளியில் தடவிக் கொள்ளும் போதே எண்ணற்ற நன்மைகளை பெற்றுக் கொள்ளலாம் என நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.
செக்கில் ஆட்டும் எண்ணெயில் ஆமணக்கு விதையிலுள்ள நஞ்சு வெளியாகாது. பாரம்பரிய முறையில் காய்ச்சி வடிப்பதால் மட்டுமே உட்கொள்ள இயலும்.
அந்த வகையில், பாரம்பரிய முறையில் காய்ச்சி வடிகட்டி எண்ணெய்யை உடம்புக்கு தடவுவதால் என்னென்ன பலன்கள் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
பயன்கள்
1. விளக்கெண்ணெய் 1 கரண்டி, சுத்தமான தேங்காய் எண்ணெய் 3 கரண்டி இவை இரண்டையும் கலந்து தலைக்கு தேய்த்து வந்தால் தலைமுடி நன்றாக வளரும். இதனை வாரத்திற்கு முறை தவறாது செய்து வர வேண்டும்.
2. உச்சந்தலை, தொப்புள், கால் விரல்கள் போன்ற இடங்களில் தேய்க்கும் பொழுது உடலில் இருக்கும் உஷ்ணம் படிபடியாக குறையும். அமர்ந்த இடத்தில் இருந்து வேலைப்பார்ப்பவர்கள் இந்த முறையை பின்பற்றலாம்.
3. கண் இமைகளில் இரு விரல் நுனியில் தேய்த்து வைத்தால் கண்களில் இருக்கும் சோர்வு மறையும். அத்துடன் கண்களுக்கு குளிர்ச்சியும் கிடைக்கும்.
4. குழந்தை பிறந்து 1-2 மாதங்கள் கழித்து விளக்கெண்ணெய் உட்கொள்ள வேண்டும். இப்படி செய்து வந்தால் கருப்பையில் உள்ள கழிவுகள் நீங்கி, வயிறு சுத்தமாகும். தினமும் எடுப்பதை தவிர்க்க வேண்டும். அதுவும் குளிர் பிரதேசங்களில் இருப்பவர்கள் மருத்துவரின் பரிந்துரையை கேட்ட பின்னர் பயன்படுத்தலாம்.
5. இளம் வயதில் இருக்கும் பெண்கள் வயிற்றில் தடவலாம். இது மாதவிடாய் பிரச்சியை சரிச் செய்யும் 1-2 கரண்டி விளக்கெண்ணெயை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் மாதவிடாய் பிரச்சினை சரியாகும்.
6. சூடான தண்ணீரில் அல்லது நேரடியாக 1-2 ஸ்பூன் உட்கொள்ளலாம். வயிற்றில் மேல் தடவி வர கர்ப்பக்காலத்தில் விழுந்த கோடுகள் நீங்கி வயிறு பழைய நிலைக்கு திரும்பும்.
7. பச்சை பயிறு மா, விளக்கெண்ணெய் ஆகிய இரண்டையும் கலந்து முகத்திற்கு தடவி வந்தால் முகத்திற்கு புத்துணர்வு கிடைக்கும். அத்துடன் சருமம் பார்ப்பதற்கு பொலிவாகவும் பிரகாசமாகவும் இருக்கும்.