யாழ்ப்பாணம் (Jaffna) – வடமராட்சி, பொற்பதி பகுதியில் கடை ஒன்றில் கெண்டோஸ் திருடியதாக குற்றம் சாட்டி கடை உரிமையாளர் 10 வயது சிறுமியை சரமாரியாக தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான சிறுமியை அவரது தாயார் கடைக்கு சென்று அங்கு சில பொருட்களை கொள்வனவு செய்து வருமாறு அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் குறித்த சிறுமி குறித்த கடைக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்துள்ளார்.
மிகுதி பணத்திற்காக சிறுமி அதற்கு பெறுமதியான கெண்டோஸ் ஒன்றினை எடுத்து உண்டுகொண்டிருந்த நிலையில் கடை உரிமையாளர் திருடப்பட்தாக கருதி குறித்த 10 வயது சிறுமியை சிறுநீர் கழியும்வரை வயரால் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதன்போது, சிறிது நேரம் கழித்து சிறுமியின் கட்டை அவிழ்த்து விட்டுள்ளனர். இந்நிலையில் சிறுமி வேதனை மற்றும் அவமானம் தாங்க முடியாது தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்க முயன்றுள்ளார்.
குறித்த விடயமறிந்த பெற்றோர் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிறுமியை கொண்டு சென்றுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.