நியூசிலாந்தின் தென்தீவுபகுதியில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச தகவ்ல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பூகம்பத்தால் சுனாமி ஆபத்துள்ளதா என நாட்டின் பேரிடர் முகவர் அமைப்பு ஆராய்ந்துவருகின்றது.
குறித்த பகுதியில் வசிப்பவர்கள் கடற்கரையோரங்களை தவிர்த்துக்கொள்ளவேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதேவேளை சுமார் 5000 மக்கள் இந்த பூகம்பத்தை உணர்ந்ததாகவும் பொருட்கள் விழுந்தன கட்டிடங்கள் குலுங்கின என நியுசிலாந்தின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.