2024-2025 சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பமாகி மூன்று மாதங்களுக்குள் ஹட்டன் வீதி வழியாக சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருளை கொண்டு சென்றதற்காக கைது செய்யப்பட்ட 592 சந்தேக நபர்களுக்கு 6 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 24 ஆம் திகதிக்கும் மார்ச் 23 ஆம் திகதிக்கும் இடையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு இவ்வாறு 6,029,324 ரூபாய் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் 20-45 வயதுக்குட்பட்ட பல்வேறு வயதுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்றும், கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும் கூறப்படுகிறது.
ஹட்டன், பொகவந்தலாவை, நோர்வூட், மஸ்கெலியா, நோர்டன்பிரிட்ஜ், நல்லதண்ணி, பொல்பிட்டிய, வட்டவளை மற்றும் கினிகத்தேன ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஹட்டன் பொலிஸ் பிரிவின் ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு வரும் நபர்களைக் கைது செய்ய தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.