கோடை வெயிலுக்கு வெள்ளரிக்காய் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் சில உணவுகளுடன் அதை சேர்த்து சாப்பிடக்கூடாது. அவை என்னென்ன என்பது குறித்து இங்கு காணலாம்.
கோடை காலம் ஆரம்பம் ஆகிவிட்டதால் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. எனவே, வெயிலை சமாளிக்க அதிக நீர்ச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்களது டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அந்த வகையில் கோடையில் நீங்கள் அதிகம் சாப்பிட வேண்டிய பட்டியலில் ஒன்றுதான் வெள்ளரிக்காய். இதில் அதிக அளவு நீர் சத்து உள்ளதால், உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். இதை நீங்கள் பச்சையாகவோ அல்லது சாலட்டில் சேர்த்து சாப்பிடலாம்.
ஆனால் வெள்ளரிக்கையை சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லதல்ல என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். மீறி சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் உள்ளிட்ட சில விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர். இப்போது வெள்ளரிக்காயை எந்தெந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
தயிர்
வெள்ளரிக்காயை தயிருடன் சேர்த்து சாப்பிடுவது நல்லதல்ல. ஏனெனில் இவை இரண்டின் செரிமான செயல்முறையானது வேறுபட்டது. அதாவது வெள்ளரிக்காயில் நிறைய தண்ணீர் உள்ளதால் சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். அதுவே தயிரில் புரோட்டின் மற்றும் கொழுப்புகள் உள்ளதால் ஜீரணமாவது சற்று நேரம் எடுக்கும். இதுதவிர வயிற்று உப்புசம், வாயு போன்ற வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் உடல் வெப்பநிலையில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும்.
சிட்ரஸ் பழங்கள்
வெள்ளரிக்காய் மற்றும் சிட்ரஸ் பழங்களை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது நல்லதல்ல. அதாவது எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் அமிலத்தன்மை உடையது. அதே சமயம் வெள்ளரிக்காய் குளிர்ச்சி தன்மையுடையது. எனவே இவை இரண்டும் சேர்ந்தால் செரிமான செயல்பாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும். இதனால் நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
தக்காளி:
தக்காளியுடன் வெள்ளரிக்காயை ஒருபோதும் சேர்த்து சாப்பிடவே கூடாது. ஏனெனில் இவை இரண்டும் செரிமானயில் வேறுபட்டது. அதாவது வெள்ளரிக்காய் சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். தக்காளியில் அமிலம் மற்றும் விதைகள் உள்ளதால் ஜீரணமாக அதிக நேரம் எடுக்கும். எனவே இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் வீக்கம், வாயு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
முள்ளங்கி:
வெள்ளரிக்கையுடன் முள்ளங்கியை ஒருபோதும் சேர்த்து சாப்பிடவே கூடாது. அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இவை இரண்டையும் சேர்ந்து சாப்பிட்டால் உடலில் வைட்டமின் சி அளவை குறைக்கும். இது தவிர இது வயிற்றில் அசெளகரியத்தை ஏற்படுத்திவிடும்.
இறைச்சி:
வெள்ளியர்களுடன் இறைச்சி சாப்பிட கூடாது. ஏனெனில் இறைச்சியில் புரதங்கள் மற்றும் கொழுப்புகள் அதிகமாக உள்ளதால், அவை ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். மேலும் இறைச்சியில் அமிலத்தன்மை உள்ளன. மறுபுறம் வெள்ளரிக்காய் எளிதான மற்றும் விரிவாக ஜீரணிக்க கூடியது. எனவே இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் வயிற்று வலி மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.