அதிகாலையில் தீப்பற்றி எரிந்த மெத்தை கடை!

கொகரெல்ல பொலிஸ் பிரிவின் தல்கொடபிட்டிய பகுதியில் உள்ள ஒரு மெத்தை கடையில் இன்று (27) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக கொகரெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக விரைந்து செயல்பட்ட பொலிஸார், உள்ளூர்வாசிகளின் உதவியுடன் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்தில் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், 36 வயதான கடைக்காரர் சிறு தீக்காயங்களுக்கு ஆளான பின்னர் சிகிச்சைக்காக குருநாகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொக்கரெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.