பார்வைத் திறனை பலப்படுத்த சத்துமாவு!

நம் கண்களைப் பாதுகாக்கவும், பார்வைத் திறனை குறையின்றி வைத்துப் பராமரிக்கவும் கேரட், ஆரஞ்சு, பசலைக் கீரை, ஸ்வீட் பொட்டட்டோ, முட்டை போன்ற உணவுப் பொருட்களை உணவுடன் சேர்த்து உட்கொண்டு வருகிறோம். இவை தவிர, பாலுடன் சேர்த்து பருகக் கூடிய சத்து மாவு ஒன்றை வீட்டிலேயே எளிய முறையில் தயாரித்து உபயோகித்து வந்தால் கண்களின் ஆரோக்கியம் பல மடங்கு உயரும் வாய்ப்புள்ளது.

இந்த மாவைத் தயாரிக்கத் தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறை எப்படி என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. பாதாம் பருப்பு (Almond) 50 கிராம்

2. பெருஞ்சீரகம் 50 கிராம்

3. கற்கண்டு (Mishri) 50 கிராம்

4. வெள்ளை மிளகு 20 கிராம்

5.குங்குமப் பூ சிறிதளவு

மேலே குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து மிருதுவான பவுடராக அரைத்துக் கொள்ளவும்.

இந்தப் பவுடரை இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் பாலில் கலந்து அப்படியே குடித்து விடலாம் அல்லது க்ரீன் டீயுடன் சேர்த்துக் கலந்து அருந்தலாம்.

இந்த மாவை இரண்டு அல்லது மூன்று கிராம் எடுத்துப் பாலில் கலந்து தினசரி குழந்தைகளுக்குக் கொடுத்து வரலாம். பெரியவர்கள் இந்த மாவில் 5 கிராம் எடுத்து பாலில் கலந்து தினமும் குடிக்கலாம். இதை நீண்ட நாட்கள் தொடர்ந்து அருந்தி வருவதால் மட்டுமே எதிர்பார்த்த பலன் கிடைக்கும் என கூறப் படுகிறது.

ஆல்மன்டில் உள்ள வைட்டமின் E மற்றும் ஒமேகா – 3

கொழுப்பு அமிலங்கள் கண்களை ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸினால் உண்டாகும் சிதைவிலிருந்து காக்க உதவும். குங்குமப் பூ ரெட்டினாவின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மாகுலர் டிஜெனரேஷன் என்னும் கண் நோய் வரும் அபாயத்தை தடுத்து நிறுத்தவும் உதவும்.

பெருஞ்சீரகம் மற்றும் வெள்ளை மிளகு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். உடலில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களின் அளவை உயர்த்தவும் உதவும்.

இதை உபயோகிக்க ஆரம்பிக்கும் முன் நிபுணர்களை கலந்து ஆலோசிப்பது நலம்.