நாக்கின் நிறம் நோயின் அறிகுறியாகும்

நம்முடைய உடலில் நாம் பெரிதும் அக்கறை காட்டாத உறுப்பு எது என்றால் அது நாக்கு தான்.

மனிதகுலம் ஒவ்வொன்றும், வெவ்வேறு மொழிகள் பேச, நாக்கு தான் உதவுகிறது.

மனிதனின் நாக்கு, தொண்டை பகுதியில் துவங்கி, நுனி வரை இருக்கும். நாக்கு, எட்டு தசைகளால் ஆனது. நாக்கின் மேல் புறத்தில் மொட்டு போன்ற சுவை அரும்புகள் இருக்கும். அவைதான், உணவின் சுவையை உணரச் செய்கின்றன. அதே நேரத்தில், நாக்கின் கீழ்ப்புறத்திலும், மொட்டுகள் இருக்கும். அவை, சுவை அரும்புகள் கிடையாது. அடிப்படையான சுவைகளான இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு போன்றவற்றை, நாக்குதான் உணர்கிறது.

நாக்கின் அனைத்து பகுதிகளிலும், அனைத்து விதமான சுவைகளை அறிய முடியும்.

நாக்கில் உள்ள சுவை அரும்புகள், என்னென்ன சுவை என்பதை, மூளைக்கு எடுத்து செல்கின்றன. ஆனால், காரம், சுவை நரம்புகள் மூலம் மூளைக்கு செல்வதில்லை. அதற்கு மாறாக, அதில் உள்ள அதிக வெப்பம் மற்றும் காரம், நரம்பின் மூலமாகத் தான், மூளைக்கு செல்கிறது. இதனால்தான், அதிக காரமான உணவை உட்கொள்ளும் போது, கண்களிலும், மூக்கிலும் நீர் வந்து விடுகிறது.

அகத்தின் அழகு முகத்தில் தெரிவது போல, உடல் உபாதைகளை, நாக்கை வைத்தே கண்டுகொள்ளலாம். இதனால் தான், டாக்டர்கள், நாக்கை நீட்டு என்கின்றனர்.

நாக்கைச் சுத்தமாக வைத்துக் கொள்ளத் தவறினால் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற தொற்றுக் கிருமிகள் நாக்கைப் பாதிக்கும். அப்போது நாக்கில் புண்கள் வரும்.

நாக்கின் நிறமோ, வடிவமோ மாறுபட்டால், அது ஏதோ ஒரு வகை நோயின் அறிகுறி என்பதை அறிந்து கொள்ளலாம். நம்முடைய நாக்கின் நிறத்தை வைத்தே நம் உடலில் உள்ள பிரச்சனை என்ன என்பதைக் கண்டுபிடிக்கலாம்…

நாக்கு அடர் சிவப்பு நிறத்தில் இருந்தால் உடலில் ஏதேனும் தொற்றுநோய் மற்றும் அலர்ஜி இருப்பதாக அர்த்தம்.

மஞ்சள் நிறத்தில் நாக்கு இருந்தால் வயிறு அல்லது கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கும். மஞ்சள் காமாலையாகவும் இருக்கலாம்.

காபி நிறப்படிவு போல் நாக்கு இருந்தால் நுரையீரல் பாதிப்பு உண்டாக வாய்பபுண்டு.