கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனையிரவு பகுதியில் 20 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி இன்றையதினம்(27.03.2025) பயணித்த கப்ரக வாகனத்தில் இவ்வாறு 20 கிலோ கஞ்சா கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் சம்மாந்துறை பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.