வீர தீர சூரன் படத்தின் முதல் நாள் வசூல் மட்டுமே எவ்வளவு தெரியுமா?

விக்ரம் – அருண்குமார் கூட்டணியில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் வீர தீர சூரன். இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா மற்றும் சுராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.

நேற்று காலை 9 மணி காட்சி சில காரணங்களால் தடைபட்டது. இதனால் ரசிகர்கள் வருத்தமடைந்தனர். பின் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு, படத்தின் மீதுள்ள தடை மாலை 4 மணிக்கு விலகிய நிலையில், மாலையில் இருந்து படத்தின் முதல் காட்சி துவங்கியது.

முதல் நாள் வசூல்
ரசிகர்களிடையே இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. விமர்சன ரீதியாகவும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், வீர தீர சூரன் திரைப்படம் முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாள் ரூ. 2.2 கோடி வசூல் செய்துள்ளது.