பிரபலமான எகிப்திய சுற்றுலாத் தலமான ஹுர்காடா அருகே, சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியதில் 6 ரஷ்யர்கள் உயிரிழந்தனர்.
மேலும் 39 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வியாழக்கிழமை, ஹுர்காடா கடற்கரையோர சுற்றுலா தளத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சின்ட்பாட்” எனப்படும் நீர்மூழ்கிக் கப்பல், 45 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 5 எகிப்திய பணியாளர்களுடன் கடலில் சென்றபோது, கரையில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் திடீரென மூழ்கியுள்ளது.
விபத்துக்கான காரணம் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.
அந்த நேரத்தில் வானிலை தெளிவாகவும், கடலில் நல்லக் காட்சியமைப்பும் இருந்ததாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது.