நாட்டில் ஆரம்பமாகவுள்ள புதிய விமான சேவை!

இலங்கையின் முதல் தனியார் விமான நிறுவனத்தின் விமான சேவை எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த விமான சேவை இலங்கையில் இருந்து மலேசியாவின் (Malaysia) கோலாலம்பூருக்கு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஃபிட்ஸ்ஏர் (FitsAir) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த விமான நிறுவனம், வணிக மற்றும் சுற்றுலா விமானங்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கும் என தெரிவிக்கப்படுகின்றது

அத்துடன், பயணிகள் மலிவு விலையில் இந்த விமான சேவையைப் பெற முடியும் என்றும் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

நாட்டில் தனியார் விமான நிறுவனம் ஒன்று ஆரம்பிக்கப்படும் என்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி நாட்டின் முதல் தனியார் விமான சேவை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.