30 ஆண்டுகளுக்கு பின் நேற்று நடந்த சனிப்பெயர்ச்சி பலன் பெறும் ராசிகள்!

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர்.

தனது பயணத்தை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சொல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதுவரை சனி பகவான் கும்ப ராசியில் பயணித்து வந்த நிலையில் 30 ஆண்டுகளுக்கு பின் மீன ராசிக்குள் நுழைந்துள்ளார். இந்த மீன ராசியில் சனி பகவான் 2027 ஆம் ஆண்டு ஜூன் 03 ஆம் தேதி வரை இருப்பார்.

எனவே இந்த சனிப்பெயர்ச்சி எந்த ராசிக்கு என்ன பலன் கொடுக்கப்போகின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சனி பகவான் சென்றுள்ளார்.
மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்கியுள்ளது.
உங்களுக்கு சனியின் பார்வை 2, 6 மற்றும் 9 ஆவது வீட்டில் விழுகிறது.
நீங்கள் எதிர்பாரத பெரிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.
நீங்கள் ஆரோக்கியத்தில் சிறந்த கவனம் செலுத்த வேண்டும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சனி பகவான் சென்றுள்ளார்.
உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி மடியும் வரை நற்பலன் நிறையவே கிடைக்கும்.
வேலையில் இருப்பவர்கள் அதனால் பல நன்மைகளை பெறுவார்கள்.
அதுவும் உங்கள் ஜாதகத்தின் படி சனிப்பெர்ச்சி வலுவாக இருந்தால் பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.

மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சனி பகவான் சென்றுள்ளார்.
இதனால் இந்த ராசிக்காரர்கள் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள்.
எடுத்துக்கொண்ட வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும்.
பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
நிதி நிலையில் சற்று முன்னேற்றம் கிடைக்கும்.

கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சனி பகவான் சென்றுள்ளார்.
இந்த சனிப்பெயர்ச்சி நீண்ட நாள் பிரச்சனையை தீர்த்து வைக்கும்.
சனியின் 3 ஆவம் பார்வை வருமான வீட்டில் விழுவதால், நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும்.
புதிய தொழில் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.
தொழில் வாய்ப்புக்கள் அதிகமாக கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சனி பகவான் சென்றுள்ளார்.
இதனால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி தொடங்கியுள்ளது.
அஷ்டம சனி என்பதால் நீங்கள் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
மனதில் ஏதாவது பயம் இருந்துகொண்டே இருந்கும்.
உங்களுக்கு வேலையில் நிறைய சஸ்பென்ஸ் இருக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சனி பகவான் சென்றுள்ளார்.
எனவே இவர்களுக்கு சனிபகவான் மூலம் எல்லாவற்றிலும் நன்மை கிடைக்கும்.
பணம் சம்பாதிக்க வாய்ப்புக்கள் நிறைய தேடி வரும்.
தொழில் ரீதியாக பல நன்மைகளைப் பெறுவார்கள்.
கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சனி பகவான் சென்றுள்ளார்.
எடத்துக்கொண்ட எந்த வேலையாக இருந்தாலும் வெற்றி நிச்சயம்.
தொழில் ரீதியாக எதிரிகள் யாரும் இருக்க மாட்டார்கள்.
நீண்ட காலமாக வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
பணிபுரிபவர்களுக்கு அடுத்த 2 1/2 காலம் சிறப்பாக இருக்கும்.
செய்துகொண்டிருக்கும் வேலையில் இருந்து இடமாறலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சனி பகவான் சென்றுள்ளார்.
இதனால் இந்த ராசிக்காரர்கள் அர்த்தாஷ்டம சனியில் இருந்து விடுபட்டுள்ளார்கள்.
இதனால் உங்களுக்கு காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
வருமானத்தை அதிகரிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
பணத்தை அதிகமாக சம்பாதிப்பீர்கள்.

தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சனி பகவான் சென்றுள்ளார்.
இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
வீட்டின் சூழல் சற்று மோசமாக இருக்கும்.
இது உங்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும்.
வேலையில் பல பிரச்சனைகள் வரும்.

மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சனி பகவான் சென்றுள்ளார்.
இதனால் இந்த ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுவார்கள்.
நீண்ட காலமாக வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
செய்யும் வேலையில் நிறைய நன்மைகள் வந்து சேரும்.
வாழ்வில் புதிய முயற்ச்சிக்கு சனிபகவான் துணை இருக்கும்.

கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சனி பகவான் சென்றுள்ளார்.
இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டம் தொடங்குகிறது.
அதுவும் சனியின் பார்வை 4, 8 மற்றும் 11 ஆவது வீட்டில் விழுகிறது.
இதனால் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்
. நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
பல நல்ல வேலை வாய்ப்புக்கள் தேடி வரும்.

மீனம்
மீன ராசியின் முதல் வீட்டிற்கு சனி பகவான் சென்றுள்ளார்.
இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் 2 ஆவது கட்டம் தொடங்குகிறது.
உங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் பல மாற்றங்கள் நிகழும்.
உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கும்.