டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பால் மில்லியன் கணக்கான அமெரிக்க மக்கள் டாய்லெட் பேப்பர் இல்லாமல் நெருக்கடிக்கு தள்ளப்படும் சூழல் உருவாகி வருகின்றது.
கனடா மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்துள்ள வரி விதிப்பு அமெரிக்காவில் எதிர்பாராத நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கனேடிய சாஃப்ட்வுட் மரத்தின் மீது கிட்டத்தட்ட இருமடங்கான வரிகளை விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ள நிலையில் மில்லியன் கணக்கான அமெரிக்க மக்கள் டாய்லெட் பேப்பர் இல்லாமல் நெருக்கடிக்கு தள்ளப்படும் சூழல் உருவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏப்ரல் 2ம் திகதி முதல் சாஃப்ட்வுட் மரத்தின் மீதான வரியை 27 சதவீதமாக உயர்த்த ட்ரம்ப் உறுதி கொண்டுள்ளார். ஆனால் இது 50 சதவீதமாக அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ட்ரம்பின் இந்த முடிவால் டாய்லெட் பேப்பர் மற்றும் பேப்பர் துண்டுகளை தயாரிக்க பயன்படும் NBSK என்ற மூலப்பொருளின் பற்றாக்குறை ஏற்படும்.
கடந்த ஆண்டு மட்டும் 2 மில்லியன் டன் கனேடிய NBSK-வை அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது. தற்போது கனடாவில் இருந்து NBSK ஏற்றுமதிக்கு வாய்ப்பில்லை என்றால், அமெரிக்க நிறுவனங்கள் பல நெருக்கடியை எதிர்கொள்ளும்.
இதனால், ட்ரம்பின் வரி 50 சதவீதத்தை தாண்டினால், பல அமெரிக்க நிறுவனங்கள் மூடப்படும் சூழல் உருவாகும் என்றே கூறப்படுகிறது.