நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ள ரயில் நிலைய அதிபர்கள்

கொழும்பில் உப ரயில் நிலைய அதிபர்கள் இன்று திங்கட்கிழமை (31) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ரயில் நிலைய அதிபர்களை நேரடியாகப் பாதிக்கும் பிரச்சினைகளை அதிகாரிகள் உடனடியாகத் தீர்க்கத் தவறியமை மற்றும் ரயில் நிலைய அதிபர் சேவையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்ப புதிய பணியாளர்களை நியமிப்பதில் ஏற்படும் தாமதம் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை அவர்களின் திட்டமிட்ட தொழிற்சங்க நடவடிக்கையின் முதல் படியாகும் என இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.