பண்டிகை காலத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட பாதுகாப்பு!

பண்டிகை காலத்தை முன்னிட்டு கொழும்பு நகரத்தில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 6,000 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் அதிகாரிகள் உட்பட இராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போக்குவரத்து பாதுகாப்புக்காக இராணுவ வீரர்களும் ரோந்து பணிகளுக்காக சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பல்வேறு பிரதேசங்களில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் ஆராய்வதற்குப் புலனாய்வு அதிகாரிகளும் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.