தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து!

தெற்கு அதிவேக வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (01) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு நோக்கி பயணித்த நான்கு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் உட்பட நால்வர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.