3ம் உலகப்போர் குறித்து புதிய புரளியை கிளப்பிய வாழும் நாஸ்ட்ராடாமஸ்

பல ஜோதிடர்கள் மற்றும் தீர்க்க தரிசிகள் இந்த 2025ம் ஆண்டு என்ன நடக்கவிருக்கிறது என்பதை துல்லியமாக கூறினாலும் இந்த காலகட்டத்தில் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும் நாஸ்ட்ராடாமஸ் 3ம் உலகப்போர் பற்றி எச்சரிக்கை ஒன்று விடுத்துள்ளார்.

தற்போது வாழும் நாஸ்ட்ராடாமஸ் கருத்துப்படி உலகில் எப்போது வேண்டுமானாலும் மூன்றாம் உலகப் போர் தொடங்கலாம் என கூறியுள்ளார். இதற்கு இந்த உலகம் தற்போது தயாராகி வருகின்றது.

இதை கூறியவர் அதோஸ் சலோம் தீர்க்கதரிசிக்கு வயது 38 ஆகும். இவர் வாழும் நாஸ்ட்ராடாமஸ் என்றும் அழைக்கப்படுகிறார்.இந்த போர் ஒரு பாரம்பரிய போராக வராமல் கலப்பின போர் மற்றும் நாசவேலையின் கலவையுடன் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

இதற்கு லாட்வியாவிற்கும் ஸ்வீடனுக்கும் இடையே கடல் அடிவாரத்தில் போடப்பட்ட ஆப்டிகல் ஃபைபர் கேபிளில் உள்ள சேதத்தை சுட்டிக்காட்டினார்.

இதன் பின்னர் ஒரு உலக வாழ் மக்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் ஒரு ஆபத்தான நெருக்கடி உருவாகும்.நவீன தகவல் தொடர்பு உள்கட்டமைப்புக்கு கடலுக்கடியில் உள்ள கேபிள்கள் இன்றியமையாதவை என்று அவர் விவரித்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்களால் பெரிய மோதல்கள் தூண்டப்படலாம். மற்றும் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மோதல் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்றும் கணித்துள்ளார். இன்று நாம் கலப்பினப் போரின் சகாப்தத்தில் வாழ்கிறோம் என்று சலோம் எச்சரித்தார்.