நாம் அனைவரும் நம் சருமத்தை பிரகாசமாக்க விரும்புகிறோம். இதற்காக நாம் பலவிதமான அழகு சாதனப் பொருட்களில் முதலீடு செய்கிறோம்.
ஆனால் சருமத்தை மேம்படுத்த இயற்கையான எளிதான மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ற வழிதான் தக்காளி சாறு. இது சருமத்தை வெண்மையாக்க ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
உண்மையில், தக்காளி சாற்றில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் இயற்கை அமிலங்கள் உள்ளன. இது கரும்புள்ளிகளைக் குறைக்க உதவுகிறது.
சருமத்தின் நிறத்தை சமன் செய்கிறது மற்றும் அதற்கு பளபளப்பை கொடுக்கின்றது. இத்தனை நன்மை நிறைந்த தக்காளியை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சருமத்திற்கு தக்காளி
தக்காளி சாறு சருமத்தின் மந்தநிலை, பழுப்பு நிறம் மற்றும் நிறமிகளை நீக்கி, சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது. இதை பல வழியில் பயன்படுத்தி சரும அழகை எடுக்க முடியும்.
தக்காளியை ஒரு டோனராகப் பயன்படுத்தலாம். இதனால் துளைகளை இறுக்கமாகி சருமத்தில் அதிகப்படியான எண்ணெயை அகற்ற உதவுகிறது. இதனால் தோல் போக போக பளபளப்பாகும்.
எப்படி பயன்படுத்துவது
முதலில் தேவைப்பட்ட தக்காளி சாற்றை பிழியவும். தயாரிக்கப்பட்ட சாற்றில் ஒரு பஞ்சுப் பந்தை நனைத்து, அதை முகம் முழுவதும் தடவவும்.
சுமார் 10-15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். இதை தினமம் செய்தால் வித்தியாசத்தை உணரலாம்.
தக்காளி மற்றும் தேன் 1 டீஸ்பூன் தக்காளி சாற்றில் 1 டீஸ்பூன் தேன் கலக்கவும். இந்தக் கலவையை உங்கள் முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு 3 முறை செய்யலாம்.
தக்காளி மற்றும் கற்றாழை ஜெல் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாறுடன் கலக்கவும். இதை முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பின்னர் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். இதை தினமும் செய்யலாம். தக்காளியை இதுபோல பயன்படுத்தினால் தோல் இறுக்கமாகி பளபளப்பாகும்.