காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு மன்னாருக்கு பதிலாக வேறு இடத்தை அரசாங்கம் தெரிவு செய்ய வேண்டும் என இலங்கையின் சூழல் பாதுகாப்பு அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
கொழும்பில் புதன்கிழமை (2) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் சூழல் பாதுகாப்பு அமைப்புகள் கூட்டாக இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன.
சூழல் நீதிக்கான நிலையம், வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சமூகம், சூழல் பாதுகாப்பு மன்றம் உட்பட்ட அமைப்புகள் காற்றாலை மின் உற்பத்தி நிலைய திட்டத்திற்காக மன்னார்தீவிற்கு பதிலாக வேறு இடத்தை ஆராய வேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
முன்னைய அறிக்கைகளில் காற்றாலை மின்திட்டத்தை அமைப்பதற்கு மன்னாரே மிகவும் பொருத்தமற்ற இடம் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என சூழல் பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.