பொதுவாக நம்முடைய சருமம் பல ஆயிரக்கணக்கான செல்களால் உருவாக்கபட்டது.
அந்த செல்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் உயிருடன் இருக்கும். அதன் பின்னர் படிபடியாக இறந்து விடும்.
இறந்த இந்த செல்களை நாம் முறையாக நீக்காவிட்டால் அது அப்படியே சருமத்தில் தங்கி, ஒரு வித கருமையை உண்டு பண்ணும். இதன் காரணமாக சிலர் அழகு நிலையங்களுக்கு சென்று அதனை ஸ்கிரப் மூலம் இல்லாமலாக்குகிறார்கள்.
இப்படி செய்வதன் மூலம் நம்முடைய சருமத்தில் இருக்கக்கூடிய இறந்து செல்கள் அனைத்தும் நீங்கி, முகம் மற்றும் கழுத்து பகுதி பார்ப்பதற்கு பொலிவாக இருக்கும்.
அப்படி முகத்தை அசிங்கப்படுத்தும் இறந்த செல்களை அழகு நிலையங்களுக்கு செல்லாமல் இலகுவாக வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு இல்லாமலாக்கலாம்.
அந்த வகையில், முகத்திலுள்ள இறந்த செல்களை இலகுவாக இல்லாமலாக்குவதற்கு என்னென்ன பொருட்களை பயன்படுத்தி ஸ்க்ரப் செய்ய வேண்டும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
காபித்தூள் ஸ்க்ரப்
தேவையான பொருட்கள்
சர்க்கரை- இரண்டு ஸ்பூன்
தேன்- ஒரு ஸ்பூன்
காபித்தூள்- கால் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்- ஒரு ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில், சர்க்கரை, தேன் மற்றும் காபித்தூள் ஆகிய மூன்றையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
அதனுடன் தேங்காய் எண்ணெய்யும் கலந்து கொள்ளலாம். இதனால் ஒவ்வாமை ஏற்படுமாயின் வேறு ஏதாவது எண்ணெய் கலந்து கொள்வது சிறந்தது.
மேற்குறிப்பிட்ட பொருட்களை அனைத்தையும் ஒன்றாக போட்டு, பசை பதத்திற்கு கலந்து விடவும்.
இந்த ஸ்க்ரப்பை இறந்த செல்கள் தென்படும் இடங்களுக்கு தடவி, நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். ஐந்து நிமிடம் அப்படியே விட்டுவிட்டு பிறகு சருமத்தை கழுவினால் போதும்.
சருமத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி பளபளப்பாக இருக்கும்.
ஸ்கரப்பில் எண்ணெய் பயன்படுத்தும் பொழுது சருமம் வறண்டு போகாமல் அப்படியே இருக்கும்.