எதிர்நீச்சல் சீரியலில் விசாலாட்சி விஷம் அருந்தி உயிருக்கு போராடும் ப்ரொமோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், தற்போது இரண்டாவது பாகத்திலும் தொடர்கின்றது.
வீட்டிற்குள் அடங்கியிருந்த பெண்கள் சமீபத்தில் வீட்டைவிட்டு வெளியே தங்களது வேலையை செய்ய முயற்சித்து வந்த நிலையில், அறிவுக்கரசியின் சதியால் அனைத்தும் தவிடு பொடியாகியுள்ளது.
இந்நிலையில் ஊர்க்காரர்கள் தன்னை அவமானப்படுத்தியதால், மனவருத்தத்தில் விஷம் குடிக்க குணசேகரன் முயற்சித்தார். ஆனால் எதிர்பாராத விதமாக விசாலாட்சி அந்த விஷத்தை குடித்துள்ளார்.
குடும்பத்தினர் அனைவரும் நிலைகுலைந்து போயுள்ள நிலையில், மருமகள்களும் கதறி அழுகின்றனர். பார்வையாளர்கள் விஷம் கொடுத்ததே குணசேகரன் தானே என்று கூறி வருவதுடன், ரேணுகா இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி எழுந்திரு டி- னு மாமியாரை கூறியுள்ளாரே என்றும் கூறிவருகின்றனர்..