பிரேசில் செல்லும் கனடியர்கள் வீசா அவசியம்!

எதிர்வரும் வரும் ஏப்ரல் 10 முதல், கனடியர்கள், பிரேசிலுக்கு செல்ல வீசா கட்டாயமாகிறது.

இதுவரை 90 நாட்கள் வரை சுற்றுலா மற்றும் வணிக நோக்கத்தில் வீசா இன்றி பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இப்போது சுற்றுலா பயணிகளுக்கு வீசா தேவைப்படும் என பிரேசில் அரசு அறிவித்துள்ளது.

வணிக மற்றும் மாணவர் வீசாவுக்கு, 90 நாட்கள் வரை வீசா தேவையில்லை என அறிவித்துள்ளது. ஆனால் 90 நாட்கள் தாண்டினால், பிரேசிலின் காவல் துறை (Federal Police) மூலம் அனுமதி பெற வேண்டும் என கனடா அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் குறிப்பிடுகிறது.

அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து வரும் பயணிகளுக்கும் இந்த புதிய வீசா விதி பிரயோகிக்கப்படும்.

எனினும், உங்களிடம் ஏற்கனவே செல்லுபடியாகும் (valid) வீசா இருந்தால், மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.