கண்டி தர்மராஜ கல்லூரிக்கும் கண்டி கிங்ஸ்வுட் கல்லூரிக்கும் இடையிலான 118வது கிரிக்கெட் தொடர் தற்போது இடம்பெற்று வருகிறது.
அந்த போட்டியின் இரண்டாவது நாள் இன்றாகும்.
இதன்போது கண்டி தர்மராஜ கல்லூரியைச் சேர்ந்த இரண்டு துடுப்பாட்ட வீரர்கள் இரட்டைச் சதம் அடித்துள்ளனர்.
தரிந்து வர்ணகுலகே மற்றும் லக்வின் அபேசிங்கே ஆகியோரே இரட்டை சதங்களை பெற்றுள்ளனர்.
அவர்கள் ஆட்டமிழக்காமல் தலா 203 ஓட்டங்களை பெற்றுள்ளனர்.