உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால்மூல வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை அரசாங்க அச்சக திணைக்களத்தின் பணிப்பாளர் ப்ரதீப் புஷ்பகுமார (Pradeep Pushpakumara) தெரிவித்துள்ளார்.
அத்துடன் இம்முறை தபால்மூல வாக்களிப்பிற்காக 7 இலட்சம் தபால் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படுகின்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தபால்மூல வாக்குச்சீட்டுகளை எதிர்வரும் 7ஆம் திகதி விநியோகிக்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்தது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 22, 23, 24ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
குறித்த நாட்களில் வாக்களிக்க முடியாத வாக்காளர்கள் ஏப்ரல் 28, 29 ஆகிய தினங்களில் வாக்களிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உள்ளூராட்சி மன்ற தேர்தல் மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.