அப்பாவிகளாகவே பிறப்பெடுத்த பெண் ராசியினர்

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நேர்மறை எதிர்மறை குணங்கள், விசேட இயல்புகள் ஆகியவற்றில் நேரடியாக தாக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் மிகவும் அப்பாவிகளாக இருப்பார்களாம்.

அப்படி எல்லோரையும் எளிதில் நம்பி பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கடகம்

கடக ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே பார்க்கும் எல்லோரையும் நம்பும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இந்த ராசி பெண்கள் அவர்களின் வளர்ப்பு இயல்பு மற்றும் அதீத இரக்க குணம் காரணமாக காரணமாக மிகவும் அப்பாவிகளாக அறியப்படுகின்றார்கள்.

இவர்கள் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாால், தர்க்க ரீதியில் சிந்திப்பது மிகவும் குறைவாகவே இருக்கும். இவர்கள் மற்றவர்களிடம் எளிமையாக ஏமாறும் அளவுக்கு அப்பாவிகளாக இருப்பார்கள்.

மீனம்
மீன ராசி பெண்கள், மிகவும் மென்மையான குணம் கொண்டவர்களாகவும் கற்பனை ஆற்றல் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் நிஜ வாழ்க்கையை அனுபவிப்பதை விடவும் கற்பனை உலகிலேயே அதிகம் வாழ்கின்றார்கள்.இது அவர்களை அப்பாவி ஆன்மாக்களாக மாற்றிவிடுகின்றது.

இந்த ராசி பெண்கள் அதிக கருணை உள்ளம் கொண்டவர்களாக இருப்பதால், மற்றவர்களால் பல விடயங்களில் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடலாம்.

துலாம்

துலாம் ராசியில் பிறந்த பெண்கள் சின்ன சின்ன விடயங்களிலும் நீதி நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் நியாயம், நல்லிணக்கம் மற்றும் அப்பாவி ராசியினராக அடையாளப்படுத்தப்படுகின்றார்கள். இந்த ராசி பெண்கள் மற்றவர்கள் மீது கண்மூடித்தனமாக நம்பிக்கை வைத்துவிடுவார்கள்.

அவர்களின் அப்பாவி குணத்தாலேயே வாழ்வில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.