யாழில் அரச கடமைக்கு இடையூறு விளைவித்த இருவர் விளக்கமறியலில்!

யாழ்ப்பாணத்தில் அரச கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கோப்பாய் பகுதியில் உள்ள கிராம சேவையாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்த இருவர் தொடர்பில் கிராம சேவையாளர் கோப்பாய் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்ததை அடுத்து, குறித்த இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது இருவரையும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (08) ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.