பிரபல சீரியல் நடிகர் திடீர் மரணம்!

சின்னத்திரை நடிகர் ஸ்ரீதர் தற்போது திடீரென மரணம் அடைந்திருப்பதாக வந்திருக்கும் செய்தி தற்போது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.

விஜய் டிவியின் செல்லம்மா தொடரிலும் அவர் நடித்து இருந்தார். இப்படி ஏராளமான சின்னத்திரை தொடர்களில் குணச்சித்திர ரோல்களில் நடித்து வந்த ஸ்ரீதருக்கு வயது 62 ஆகும் நிலையில் இன்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது.

மரணம்
அவரை மருத்துவமனையில் அட்மிட் செய்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.

ஜீ தமிழ் சேனல் அவருக்கு இரங்கல் பதிவு போட்டிருக்கும் நிலையில், அவருக்கு கமெண்டில் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.