நாட்டின் சில மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டு அச்சிடும் பணி நிறைவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் நிறைவடைந்து, தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக பணிப்பாளர் பிரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

அதன்படி, 25 மாவட்டங்களுக்கான தபால் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், அனைத்து மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகளும் தற்போது அச்சிடப்பட்டு வருவதாகவும், 10 மாவட்டங்களுக்கான அனைத்து வாக்குச் சீட்டுகளும் அச்சிடும் பணி ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி, பொலன்னறுவை, கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, மொனராகலை, மாத்தளை, மட்டக்களப்பு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி தற்போது நிறைவடைந்துள்ளது.

வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டவுடன் தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாக அச்சக பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, ஏப்ரல் 28 ஆம் திகதிக்குள் குறித்த வாக்குச் சீட்டுகளை அச்சிட்டு விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.