இந்த எண்ணில் பிறந்த பெண்களை யாராலும் அசைக்கவே முடியாதாம்!

எண் கணித சாஸ்திரம் எனப்படுவது தொன்று தொட்டு புலக்கத்தில் இருக்கும் ஒரு பழங்கால சாஸ்திர முறையாகும்.

ஒருவர் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துவது போல், எண்கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவர்களின் ஆளுமை மற்றும் குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் பெருமளவில் ஆதிக்கம் செலுத்துகின்றது. எண்களால் ஒருவரை வாழ்வில் வெற்றியின் உச்சத்துக்கு கொண்டு செல்லவும் முடியும். அது போல் பாதாளத்தில் வீழ்த்தவும் முடியும் என எண்கணித சாஸ்திரம் நம்புகின்றது.

அந்த வகையில் எந்த மாதத்திலும் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்த பெண்கள் யாராலும் வெல்ல முடியாத அளவுக்கு அசாத்திய திறமைசாலிகளாகலும், மன வலிமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

எண் 1

எந்த மாதத்திலும் 1, 10, 19 அல்லது 28 ஆம் திகதிகளில் பிறந்த பெண்கள் மனவலிமைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் யாராலும் வீழ்த்த முடியாத அளவுக்கு தைரியசாலிகளாக இருப்பார்கள். இவர்களிடம் அயல்பாகவே தலைமைத்துவ குணங்கள் நிறைந்திருக்கும்.

இவர்கள் எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டிலே கணிக்கும் திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் இருக்கும் இடத்தில் இவர்களின் ஆதிக்கமே நிறைந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் ஓங்கி காணப்படும்.

எண் 4
12 மாதங்களில் எந்த மாதத்திலும் 4, 13, 22 மற்றும் 31ஆகிய திகதிகளில் பிறந்த பெண்கள் மனவலிமைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

கடினமாக சூழ்நிலைகளையும் பதற்றம் இன்றி தெளிவாக சமாளிக்கும் அசாத்திய திறமை இவர்களிடம் இருக்கும்.

இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் அசாத்தியமான நிதி முகாமைத்துவ ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு கையில் இருக்கும் பணத்தை எப்படி இரட்டிப்பாக்குவது என்பது நன்றாகவே தெரியும்.

இவர்களின் சமநிலையான குணம் மற்றவர்களால் இவர்களை வெற்றிக்கொள்ள முடியாம அளவுக்கு திறமைசாலிகளாக இவர்களை மாற்றுகின்றது.

எண் 8

அனைத்து மாதத்திலும் 8, 17 மற்றும் 26 ஆகிய திகதிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே நீதி, நேர்மைக்கு பெயர் பெற்றவர்களாகவும் அசைக்க முடியாத தன்னம்பிக்கை கொண்டவராகவும் இருப்பார்கள்.

அவர்கள் எப்போதும் தங்கள் விருப்பத்தை முழுமையாக செயல்படுத்த முயற்சி எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அவர்கள் தங்கள் வாழ்க்கையை மட்டுமின்றி தாங்கள் சார்ந்தவர்களின் வாழ்க்கையையும் முழுமையாகக் கட்டுப்படுத்தக் கூடியவர்களாக இருப்பார்கள். அவர்களை வெல்வது அசாத்தியமான விடயமாக இருக்கும்.