வாழைச்சேனையில் வயோதிபர் ஒருவர் அடித்துக் கொலை!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளத்துச்சேனை பேரில்லாவெளி பகுதியில் நேற்று (08) வயோதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

63 வயதுடைய வயோதிபர் ஒருவரே இவ்வாறு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இச் சம்பவத்தை செய்தவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், கொலைக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.