ஃபைப்ரோமியால்ஜியா பெண்களை பாதிகும் ஒரு நோய்குறியாகும் இது, உங்கள் உடல் முழுவதும் தசைகள் மற்றும் மூட்டுகளில் வலியை ஏற்படுத்துகிறது. இது உங்களை சோர்வடையச் செய்து நினைவாற்றல் பிரச்சினைகள் போன்ற மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
ஃபைப்ரோமியால்ஜியாவுக்கு என்ன காரணம் என்று இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை அதற்கு எந்த சிகிச்சையும் இல்லை, ஆனால் உங்கள் அறிகுறிகளை நிர்வகிக்க சிகிச்சைகளைக் கண்டறிய ஒரு மருத்துவ நிபுணரின் ஆலாசனையை பெற்றுக்கொள்ளலாம்.
ஃபைப்ரோமியால்ஜியா என்றால் என்ன?
ஃபைப்ரோமியால்ஜியா என்பது உங்கள் உடல் முழுவதும் வலி மற்றும் மென்மையை ஏற்படுத்தும் ஒரு நாள்பட்ட உடல்நலக் கோளாறாக அறியப்படுகின்றது.
இது தசைக்கூட்டு வலி மற்றும் தீவிரமான உடல் சோர்வை ஏற்படுத்தக்கூடியது. “கிரேக்க மொழியில் ‘ஃபைப்ரோமையால்ஜியா’ என்றால் `தீராத தசைவலி அல்லது நாள்பட்ட வலி என அர்த்ப்படுகின்றது.
ஃபைப்ரோமியால்ஜியா உள்ளவர்கள் பொதுவாக ஃபிளேர்-அப்கள் எனப்படும் மாதவிடாய் காலங்களில் வந்து போகும் அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள்.
சில நேரங்களில், ஃபைப்ரோமியால்ஜியாவுடன் வாழ்வது சோர்வாகவும் சவாலாகவும் அமைகின்றது. நன்றாக உணருவதற்கும் திடீரென அறிகுறிகள் வெடிப்பதற்கும் இடையிலான உச்சநிலைகள் மற்றும் தாழ்வு நிலைகளை உணர கூடியதாக இருக்கும்.
ஃபைப்ரோமியால்ஜியா ஏற்படுவதற்கான உண்மையான காரணம் என்று இதுவரையில் எதுவும் குறிப்பிட்டு கூறப்படவில்லை. ஆனால் சில உடல்நலக் குறைபாடுகள், மன அழுத்தம் மற்றும் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பிற மாற்றங்கள் அதைத் தூண்டக்கூடும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
உங்கள் உயிரியல் பெற்றோரில் ஒருவருக்கு ஃபைப்ரோமியால்ஜியா இருந்தால் உங்களுக்கு ஃபைப்ரோமியால்ஜியா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
உங்கள் உடலில் ஏற்படும் எந்தவொரு புதிய வலியும் பெரும்பாலும் ஃபைப்ரோமியால்ஜியாவின் முதல் அறிகுறியாக இருக்கலாம்.
குறிப்பாக உங்கள் தசைகளில் ஏற்படும் புதிய வலி, சோர்வு மற்றும் பிற அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால், அவை வந்து போவது போல் உணர்ந்தாலும் கூட அது ஃபைப்ரோமியால்ஜியாவின் அறிகுறியாக இருக்கும்.
பொதுவான அறிகுறிகள்
ஃபைப்ரோமியால்ஜியா உடல், மன மற்றும் உணர்ச்சி அறிகுறிகளை ஏற்படுத்தும்.
தசை வலி அல்லது மென்மை
சோர்வு
முகம் மற்றும் தாடை வலி
தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி
வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் உள்ளிட்ட நாள்ப்பட்ட செரிமான பிரச்சினைகள்
சிறுநீர் கட்டுப்பாட்டு பிரச்சினைகள்
மன அமைதியின்மை
பதட்டம்
மனச்சோர்வு
தூக்கமின்மை மற்றும் பிற தூக்கக் கோளாறுகள் பேன்றவை ஃபைப்ரோமியால்ஜியாவின் சில பொதுவான அறிகுறிகளாக அறியப்படுகின்றது.
ஆபத்து காரணிகள் என்னென்ன?
ஃபைப்ரோமியால்ஜியாவுக்கு என்ன காரணம் என்று நிபுணர்களால் உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும், சில உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் பிற பிரச்சினைகள் அதை வளர்ப்பதற்கான ஆபத்து காரணிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றது.
40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஃபைப்ரோமியால்ஜியா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் இது குழந்தைகள் உட்பட யாரையும் பாதிக்கலாம்.
பெண்கள் ஃபைப்ரோமியால்ஜியாவை அனுபவிக்கும் வாய்ப்பு இரு மடங்கு அதிகம் என ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
கீல்வாதம், மனச்சோர்வு, பதட்டக் கோளாறுகள், நாள்பட்ட முதுகுவலி மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி போன்ற நிலைமைகளைக் கொண்டவர்களுக்கு ஃபைப்ரோமியால்ஜியா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சிலருக்கு தொற்றுநோய்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்றதன் பின்னர் ஃபைப்ரோமியால்ஜியா ஏற்படுகின்றது.
நாம் அனுபவிக்கும் மன அழுத்தத்தின் அளவை ஒரு சோதனையில் அளவிட முடியாது, ஆனால் அதிக மன அழுத்தம் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
உடல் அல்லது உணர்ச்சி அதிர்ச்சி அல்லது கடுமையான காயத்தை அனுபவித்தவர்களுக்கு சில நேரங்களில் ஃபைப்ரோமியால்ஜியா ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது.
எவ்வாறு சிகிச்சையளிக்கப்படுகிறது?
ஃபைப்ரோமியால்ஜியா உள்ள ஒவ்வொரு நபருக்கும் பயன் தரக்கூடிய ஒரு சிகிச்சை இன்னும் கண்டறியப்படவில்லை.
உங்கள் அறிகுறிகளைப் போக்க சிகிச்சைகளின் கலவையைக் கண்டறிய உங்கள் மருத்துவர் சில உதவிகளை மட்டுமே வழங்க முடியும்.
நீங்கள் அனுபவிக்கும் அறிகுறிகள் மற்றும் அவை எப்போது மாறுகின்றன (அவை எப்போது மேம்படுகின்றன அல்லது மோசமடைகின்றன என்பது உட்பட) என்பதை உங்கள் மருத்துவரிடம் கூறுவதால், சில தீர்வுகளை பெற்றுக்கொள்ளலாம்.
வலியைப் போக்க ஓவர்-தி-கவுண்டர் (OTC) அல்லது பரிந்துரைக்கப்பட்ட மருந்து. நீட்சி அல்லது வலிமை பயிற்சி போன்ற பயிற்சிகள்.
தூக்க சிகிச்சை
அறிவாற்றல் நடத்தை சிகிச்சை
மன அழுத்த மேலாண்மை சிகிச்சை
மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள் போன்றவற்றின் மூலமே ஃபைப்ரோமியால்ஜியாவின் அறிகுறிகள் கட்டுப்படுத்தப்படுகின்றது.