பூட்டான் இந்தியா உறவுகள் வலுவான நிலையில்!

ஆறாவது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கேயை சந்தித்தார். இரு நாடுகளும் பல துறைகளில் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருவதாக அவர் கூறினார்.

பூட்டானுடனான இந்தியாவின் நட்புறவு வலுவானது என்று பிரதமர் மோடி மேலும் கூறினார்.

எக்ஸ் தளத்தில் இது குறித்த ஒரு பதிவில், “எனது நல்ல நண்பர் பிரதமர் டோப்கேயுடன் ஒரு சிறந்த கலந்துரையாடலை நடத்தினேன். பூட்டானுடனான இந்தியாவின் நட்புறவு வலுவானது. நாங்கள் பல துறைகளில் விரிவாக ஒத்துழைத்து வருகிறோம்” என்று அவர் கூறினார்.

ஷெரிங் டோப்கே பிரதமர் மோடியை ஒரு மூத்த சகோதரர் என்று அழைத்தார். பூட்டான்-இந்தியா நட்பை மேலும் மேம்படுத்துவது குறித்து ஆராய்ந்ததாகவும் அவர் கூறினார்.

எக்ஸ் தள பதிவில், “எனது மூத்த சகோதரரும் வழிகாட்டியுமான பிரதமர் நரேந்திர மோடி ஜியை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது. பிம்ஸ்டெக், பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் பூட்டான்-இந்தியா நட்பை மேலும் மேம்படுத்துதல் குறித்து ஆராய்ந்தோம்” என்று அவர் கூறினார்.

“திறன் மேம்பாட்டு கட்டமைப்புகளுக்கு ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டாக பிம்ஸ்டெக் இருக்கும் . நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் கற்றுக்கொண்டு வளர்வோம்! பிம்ஸ்டெக்கை கூட்டாக முன்னேற்றுவோம்.நமது இளைஞர்கள்தான் தலைமை வகிப்பார்கள்” என்று பிரதமர் மோடி கூறினார்.