புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகளை பார்வையிட விசேட வாய்ப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின்போது கைதிகளை குடும்பத்தினர் அல்லது விருந்தினர்கள் திறந்தவெளியில் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் காமினி திசாநாயக்க அறிவித்துள்ளார்.

அதன்படி, நாளை மற்றும் நாளை மறுதினம் நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் திறந்தவெளியில் கைதிகளை பார்வையிட அனுமதிக்கப்படுமென குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருகைகளின்போது, ஒவ்வொரு கைதியும் தங்கள் உறவினர்களால் கொண்டு வரப்படும் உணவு, இனிப்புகள் அல்லது சுகாதாரப் பொருட்களை பெறவும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஒவ்வொரு சிறைச்சாலைகளிலும் சுகாதார வழிகாட்டுதல்களின்படி இவை மேற்கொள்ளப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.