அண்ணாமலைக்கு புதிய பதவி

அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு வழங்கப்படும் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை

பாஜக தலைவர் பொறுப்புக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு அளித்துள்ளார். இதன்மூலம், நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார்.

அண்ணாமலை இருந்தால் அதிமுக – பாஜக கூட்டணி அமைவது கஷ்டம் என்று டெல்லி இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் தளத்தில்,

“பாஜக மாநில தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்பமனு அளித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை அளித்த பங்களிப்பு பாராட்டத்தக்கது.

பிரதமர் மோடியின் கொள்கைகளை கிராமங்கள் தோறும் கொண்டு சேர்த்ததில் அண்ணாமலையின் பங்கு மெச்சத்தக்கது. பாஜகவின் தேசிய பணிகளுக்கு அண்ணாமலையின் திறமை பயன்படுத்தப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.